குளிப்பாட்டப்பட்ட பின்னவல “சுரங்கி”யின் குழந்தைகள்!
“பின்னவல” யானைகள் சரணாலயத்தில் பிறந்த இரட்டை ஆண் யானைக் குட்டிகள் இன்று (6) விலங்கினக் காட்சிசாலையில் முதல் தடவையாக குளிப்பாட்டப்பட்டன.
இலங்கை யானைகள் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாளைக் குறிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்று பின்னவல யானைகள் காப்பகத்தில் இரட்டைக் குட்டிகள் பிறந்தன.
“சுரங்கி” என்ற தாய் யானை, 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் ”பின்னவல” யானைகள் காப்பகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் அதன் இரட்டை குட்டிகளை குளிப்பாட்டும் நிகழ்வு, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் ஷெர்மிளா ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
நல்ல ஆரோக்கியமான இந்த யானைக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) பின்னவல யானைகள் சரணாலயத்தில் நடைபெறவுள்ளது.