இலங்கையுடன் அரசியல் கலந்துரையாடல் நடத்திய துர்க்மெனிஸ்தான்
மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகங்கள் கடந்த மாதம் ஒரு காணொளி மாநாட்டின் வடிவத்தில் அரசியல் ஆலோசனைகளை நடத்தியதாக துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, கலாசாரம், மனிதாபிமானம் மற்றும் விவசாயத் துறைகளில் இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை குறித்து இருதரப்பும் இதன்போது விவாதித்தன.
அத்துடன் இருதரப்பு தொடர்புகளுக்கான முன்னுரிமைகளை அடையாளம் கண்டுள்ளதாக துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள்
எண்ணெய் மற்றும் எரிவாயு, இரசாயனத் தொழில்கள், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறை, ஆடைத் தொழில், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை இரண்டு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
துர்க்மெனிஸ்தான் மற்றும் இலங்கை நாடாளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துதல் மற்றும் பல்வேறு மட்டங்களில் வருகைகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரண்டு தரப்புக்களும் விவாதித்தன.
மேலும், துர்க்மெனிஸ்தான்- வடமேற்கில் கஸகஸ்தான், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கில் உஸ்பெகிஸ்தான், தென்கிழக்கில் ஆப்கானிஸ்தான், தெற்கு மற்றும் தென்மேற்கில் ஈரான் ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
