துருக்கி விமான நிலையத்தில் தரையிறக்கிய விமானத்தில் பரபரப்பு - உயிர் தப்பிய பயணிகள்
துருக்கியே ஏர்லைன்ஸ் விமானத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்தான்புல்லில் இருந்து தெற்கு துருக்கிய மாகாணமான Hatay விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த போது, விமானத்தில் டயர்கள் வெடித்தமையால் இந்த நிலை ஏற்பட்டது.
விமான நிலையத்தில் பரபரப்பு
Passengers of a Turkish Airlines, TK2256 (Boeing 737-800) have been evacuated via emergency slides at Antakya-Hatay Airport, Turkey. pic.twitter.com/jdjJFJ1E9Z
— Aviation Voice (@Aviation_Voice) October 6, 2022
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் காயங்கள் எதுவும் இல்லை என துருக்கியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டயர் வெடித்த போயிங் 737-800 ரக விமானத்தில் 105 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து விமான அதிகாரிகள் குறிப்பிட்ட வழி ஊடாக பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
விமானத்தின் டயர்கள் அதிக வெப்பமடைந்தமையால் வெடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.