இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கி விருப்பம்
இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கி விருப்பம் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இலங்கையின் தூதர் எம். ரிஸ்வி ஹாசன், துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹலுசி அகாரை அங்காராவில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்ததாகவும் இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்தான்புலில்; நடைபெறவிருக்கும் 15 வது சர்வதேச பாதுகாப்பு தொழில்
கண்காட்சி 2021 க்கான உயர்மட்ட இராணுவ பிரதிநிதிகள் பரிமாற்றம் மற்றும்
ஏற்பாடுகள் குறித்து துருக்கியின் அமைச்சர் இலங்கையின் தூதருக்கு
விளக்கமளித்தார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
