இரண்டாவது பேரழிவை சந்திக்கும் ஆபத்தில் நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தவர்கள்! உலக சுகாதார ஸ்தாபனம் கவலை
துருக்கி - சிரியாவில் நிலநடுக்கத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருக்க பாதுகாப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் 5ஆவது நாளாக மீட்புப் பணி நீடித்து வரும் நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கடுங்குளிர் மற்றும் பசியின் காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரண்டாவது பேரழிவு
இந்த அனர்த்ததிலிருந்து உயிர்தப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் திறந்தவெளியில் மோசமான நிலைகளில் காணப்படுகின்றனர். அவர்களுக்கான உணவு,எரிபொருள்,மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது நாம் முதலாவது பேரழிவின் பின்னர் இரண்டாவது பேரழிவை சந்திக்கும் ஆபத்தில் உள்ளோம். முதல் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
