உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை அதிகரிப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடூரமான இயற்கை சீற்றம் இதுவென புவியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று முன்தினம் (06.02.2023) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்ததாக துருக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,236 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த கால விபரங்கள்
கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8,800 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, 2011 ஆம் ஆண்டு ஜப்பான் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20,000 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய நிலநடுக்கமும் அந்த அளவிற்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 57 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
