துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் பயங்கர நிலநடுக்கங்களின் வரலாறு
உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக துருக்கி பதிவாகி வருகின்றது.
அனடோலியன் தட்டில் அமர்ந்திருக்கும் துருக்கி யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கமும், உயிர் சேதங்களும் பதிவாகிய வண்ணம் உள்ளது.
மோசமாக நிலநடுக்கம்
அந்த வகையில், துருக்கி வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவாகியிருந்ததுடன், 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
2003 ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் 6.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் 170 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
2011ஆம் ஆண்டு 7.2, 5.8 மற்றும் 5.6 ரிக்டர் அளவுகளில் துருக்கி நகரங்களைத் தாக்கிய மூன்று நிலநடுக்கங்களில் 600 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு எல்சாயிக் நகரில் 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 40 பேர் அரணமடைந்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
