தொடர்ந்து தாக்கும் சுனாமி அலை : இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கையை அடுத்து அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் கலிபோர்னியா, அமெரிக்காவின் பிற மேற்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் ஹவாயில் வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கெப்செட்கா தீபகற்ப பகுதியில் இன்று(30) காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரோ பாவ்லோவ்ஸ்க் - கெப்செட்காவில் இருந்து சுமார் 136 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடற்கரையோரத்தில் உள்ள மக்கள்
இது ரிக்டர் அளவில் 8.8-ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் கடற்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே ரஷ்யாவின் குரில் தீவுகளின் பரமுஷிர் தீவில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியைத் சுனாமி கடுமையாக தாக்கியது.
இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை
கம்சட்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவு, அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகள் மற்றும் பசுபிக் பெருங்கடலின் பிற பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் இருந்து வடக்கு நோக்கி ஓரிகான், வொஷிங்டன், பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும், தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பம் வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆகவே கடலோர பகுதி மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
