ஜப்பான் - ரஷ்யாவை மிரள வைத்த சுனாமி அலைகள்.. வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம் அனைத்து சுனாமி எச்சரிக்கைகளையும் நீக்குவதாக அறிவித்துள்ளது.
அதேவேளை, ரஷ்யாவும் சுனாமி எச்சரிக்கைகளை நீக்கியுள்ளதுடன் அபாயங்கள் ஏற்படும் அச்சம் இன்னும் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கம்சட்கா தீபகற்பம் மற்றும் குரில் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை ரஷ்ய அதிகாரிகள் இரத்து செய்துள்ளனர்.
இருப்பினும், சில ஆபத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள அவாச்சா விரிகுடாவின் கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவு வரையிலான பின்னதிர்வுகள் மற்றும் சாத்தியமான சுனாமி அலைகளை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியும் அப்பகுதியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் நகரத்தை நான்காவது சுனாமி அலை அடைந்துள்ளது.
இதன்போது, மின் இணைப்பு சேதமடைந்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இதற்கு முன்னர் ஏற்பட்ட மூன்றாவது அலை மிகவும் கடுமையானதாக இருந்தது எனவும், இது நிறைய சேதத்தை ஏற்படுத்தியது எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பலத்த சேதம்..
தற்போது ஏற்பட்டுள்ள இந்த நான்காவது அலை பலவீனமானது தான் எனவும் அதனால் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது அலை, துறைமுக உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதுடன் முழு சிறிய கடற்படையும் கடலுக்குள் இழுக்கப்பட்டது, அது இப்போது ஜலசந்தியில் இருந்த சில கப்பல்கள் கரை ஒதுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்வதாகவும், கம்சட்கா அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, செவெரோ-குரில்ஸ்கில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, சுனாமி அபாய மண்டலத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரஷ்யாவின் குறித்த பிரதேசங்களில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவுகள் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



