விடுதலை புலிகளின் தங்கத்தை மீட்க முயற்சி: எட்டு பேர் கைது
வாகரை வெருகல் பாலத்திற்கு அருகில் தொல்லியல் பெறுமதிமிக்க டயலொக்கல பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கத்தை மீட்க முயற்சி

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 38 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் வாகரை, திருகோணமலை, வத்தேகம, நுகவெல மற்றும் குன்னேபான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைதானவர்கள் வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan