ஜனாதிபதி, பிரதமரின் உருவப்படங்களை எரிக்க முயற்சி! அலரிமாளிகை முன்னால் தொடரும் போராட்டம்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களால் அலரிமாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில், பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.
அதனை நம்பி விண்ணப்பித்த மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பகல் அலரிமாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தற்போது சத்தியாக்கிரகப் போராட்டமாக அதனை மாற்றி மேற்கொண்டு வருகின்றார்கள். இதேவேளை, இன்றைய போராட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவங்களுக்கு தீ வைக்க முயன்றதை அடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டது. இதனையடுத்து சிவில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உருவங்களை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது,
இந்நிலையில், பதற்றமான நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



