ட்ரம்பின் வரி விதிப்பு கொள்ளை நடைமுறைச் சாத்தியமற்றது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை நடைமுறைச் சாத்தியமற்றது என கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பொருளாதாரக் கொள்ளைகள் வேறு எந்தவொரு நாட்டிலும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர்.
ட்ரம்பின் வரி விதிப்பு கொள்ளை நடைமுறைச் சாத்தியமற்றது என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது பிரதி அமைச்சர் சதுரங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ள்ளார்.