அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு மக்ரோன் பதிலடி
உக்ரைனுடனான போர் நிறுத்த திட்டத்தில் அமெரிக்கா முனைப்பு காட்டி வரும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியானது சர்வதேசத்தின் கவணத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனுக்கு தனது ஆதரவை மீண்டும் வழங்குவேன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர்
ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர் என்றும், உக்ரைனியர்கள் அந்த ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் மக்ரோன் கூறியுள்ளார்.
மேலும் ஆரம்பத்தில் இருந்தே போராடி வருபவர்களை நாம் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் வெள்ளை மாளிகையில் போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த விவாதங்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்துள்ளார்.
வெளியேறிய ஜெலென்ஸ்கி
இந்த சந்திப்பில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான விவாதங்கள் உள்ளான நிலையில், தற்போது ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கேட்பது சரியானது என்று கூறியுள்ளார்.
அத்தகைய உத்தரவாதங்கள் இல்லாத போர்நிறுத்தம் முழு ஐரோப்பிய கண்டத்தையும் ரஷ்யா ஆக்கிரமிக்க வழிவகுக்கும் என்று X இல் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |