ரஷ்யாவை சென்றடையவுள்ள அமெரிக்க குழு! சூடுபிடிக்கும் பேச்சுவார்த்தைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று ரஷ்யாவை சென்றடையவுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து போர்நிறுத்தம் தொடர்பில் சாதகமான பதிலை பெற முடியும் என நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கிடையில் காரசாரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
ரஷ்யாவின் பதில்
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்றையதினம்(11.03.2025) 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது.
அத்துடன், இனி அனைத்து விடயங்களும் ரஷ்யாவை சார்ந்துள்ளது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு பதிலளிக்குமாறு அவர் ரஷ்யாவை கோரியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் விளக்கத்தை பெற காத்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர், முழு விவரம் Cineulagam
