ட்ரம்பின் வரி விதிப்பிற்கு அரசாங்கத்தை கடுமையாக சாடும் நாமல்
ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் ஏனைய நாடுகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிலையில் அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை என்பதோடு, அரசுக்கு 30 வீதம் குறைப்பு போதும் என்று நினைக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநேக துறைகளுக்கும் இது பாதிப்பு
மேலும் தெரிவிக்கையில், ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் மிக உன்னிப்பாக செயற்படுமாறு நாம் தொடர்ச்சியா தெரிவித்தோம்.
அரசாங்கம் கடிதம் அனுப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கான பதிலும் கிடைத்து விட்டது.
14 வீதம் குறைப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனாலும் 30 வீதவரி நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்தோடு அநேக துறைகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அரசாங்கம் வரிகுறைப்பை சாதாரணப்படுத்தினாலும் தொழில்துறையினர் அதை பாதகமாகவே கருதுகின்றனர். அத்தோடு நாம் ஏனைய வலய வர்த்தக நாடுகளுடன் ஒன்றிணைந்து பெச்சுவார்த்தையில் ஈடுபட்டிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
