ட்ரம்பின் உலோக வரி.. கடுமையான நெருக்கடியில் உலகலாவிய வர்த்தகம்
செம்பு இறக்குமதிக்கு அமெரிக்கா, தோராயமாக 50 சதவீத வரியை விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நடைமுறை தொழில்துறை உலோகத்திற்கான விலைகளை உயர்த்தி, உலகளாவிய வர்த்தகப் போரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஓகஸ்ட் 1ஆம் திகதியிலோ இந்தக் கட்டண உயர்வு நடைமுறை வரும் என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் பிற்பகல் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு அமெரிக்க செம்பு விலைகள் உயர்ந்துள்ளன, அத்துடன் CME குழுமத்தின் உலோகங்களின் எதிர்கால வர்த்தகம் 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு பவுண்டுக்கு 5.50 டொலருக்கு மேல் உயர்ந்துளடளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை அதிகரிப்பு
உலகலாவிய ரீதியில் மின்னணுவியல், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் கட்டுமானத்தில் செம்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ட்ரம்பின் அறிவிப்புக்கு பின்னர் எதிர்பார்த்ததை விட உலோக பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து அரிசோனாவை தளமாகக் கொண்ட செப்புச் சுரங்க நிறுவனமான ஃப்ரீபோர்ட்-மெக்மோரானின் பங்குகள் 5.6 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததாக கணிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, அமெரிக்காவிற்கு சுத்திகரிக்கப்பட்ட செம்பை வழங்கும் மிகப்பெரிய நாடு சிலி ஆகும், அதைத் தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிகோ ஆகியன உள்ளன.
மேலும், ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 வர்த்தக கூட்டாளி நாடுகளை கடுமையான "பரஸ்பர" வரிகள் விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்திய ஒரு நாள் கழித்து, செம்பின் மீது புதிய வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |