விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை- சில அறிவிப்புகள் வெளியாகலாம் என டொனால்ட் ட்ரம்ப் உறுதி
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்(Vladimir Putin) நாளை(18) பேச உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் புளோரிடாவில் இருந்து வோஷிங்டனுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுடன் உரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
இங்கு தொடர்ந்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அவர்,
"செவ்வாய்க்கிழமை சில அறிவிப்புகள் வெளியாகுவதை நாம் பார்க்கலாம். நான் புடினுடன் செவ்வாய்க்கிழமை பேச இருக்கிறேன்.
கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எனப் பார்க்கிறோம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
ரஸ்ய- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ட்ரம்ப் தீவிரமாக உள்ளார்.
அதனை தொடர்ந்து பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ரஸ்ய தரப்பிலிருந்தும் சாதகமான தகவல்களே கிடைக்கப்பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையிலேயே நாளையதினம்(18) ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நாளை(18) பேச உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |