சர்வதேச ஊடகமொன்றில் திடீர் பேசுபொருளாகிய இலங்கை..!
அமெரிக்க நிர்வாகம் விதித்துள்ள புதிய கட்டண திட்டங்கள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று நடத்திய விவாதத்தில் எதிர்பாராத விதமாக இலங்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக சமநிலையின்மை குறைவாக இருந்த போதிலும், இலங்கையை கட்டணப் பட்டியலில் சேர்ப்பதன் பின்னணியில் உள்ள தர்க்கம் தொடர்பில் குறித்த ஊடக விவாதத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளது.
அதற்கமைய, "அமெரிக்கர்கள் இலங்கையிலிருந்து நிறைய துணிகளை வாங்குகிறார்கள், ஆனால் இலங்கை அமெரிக்காவிலிருந்து அதிக எரிவாயு விசையாழிகளை வாங்குவதில்லை. அது சரிசெய்யப்பட வேண்டிய வர்த்தக ஏற்றத்தாழ்வு அல்ல" என்று விவாதத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் வரி உத்தி..
மேலும், இலங்கை, ஜோர்டான் மற்றும் சாம்பியா போன்ற நாடுகளை பட்டியலில் பார்த்ததில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த ஊடகத்தின் தொகுப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரஸ்பர வர்த்தகம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் தவறான தத்துவத்தை இந்த வரி உத்தி பிரதிபலிக்கிறது என்றும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். இதன்போது, இலங்கை்கு 44 வீத வரியை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார நலனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தால் அமெரிக்காவுடன் வரிவிதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டது.