ட்ரம்பின் தீர்மானத்தால் இந்தியாவினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
அமெரிக்காவின் பரஸ்பர வரி முறையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட 30 சதவீத வரியை மேலும் குறைக்கத் தவறினால் கடும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு செய்யப்படவில்லை என்றால் அமெரிக்காவில் ஆடை கொள்வனவு செய்பவர்கள் தங்கள் தேவைகளுக்காக இலங்கையை விட குறைந்த கட்டண சலுகைகளை பெற்ற நாடுகளை நோக்கித் திரும்பும் அபாயம் உள்ளதாக ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மீது விதிக்கப்பட்ட 30 சதவீத வரி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. வியட்நாமில் பரஸ்பர வரி முறையின் கீழ் 20 சதவீத வரி விகிதம் உள்ளது. இந்தியா 20 சதவீதத்திற்கும் குறைவான வரி விகிதத்திற்கு உட்பட்டிருக்கும் என எதிர்பார்ககப்படுகின்றது.
வரி குறைப்பு
இந்த நிலையில் இலங்கை மீது விதிக்கப்பட்ட 30 சதவீத வரியைக் குறைக்க அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரவிருக்கும் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் மீது 20 சதவீதத்திற்கும் குறைவான வரி விகிதத்தை ஏற்படுத்தும். அது நடந்தால், இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தியா இருக்கும் என ஆடை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதில் 40.04 சதவீதம் அல்லது 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டது.
இதேபோல், இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், ஆடை ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 746.53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்க சந்தைக்கு ஆடை ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டது.
ஏற்றுமதி வருமானம்
ஆடை ஏற்றுமதிக்கான நாட்டின் முக்கிய சந்தையாக அமெரிக்கா உள்ளது, அதே நேரத்தில் பிரித்தானியா இரண்டாவது பெரிய சந்தையாகும்.
கடந்த ஆண்டு, இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் அமெரிக்கா 40.04 சதவீதத்தைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் பிரித்தானியா 14.17 சதவீதத்தை கொண்டிருந்தது.
சமீபத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அமெரிக்கா நாட்டின் முக்கிய ஆடை சந்தை என்றும் அதை ஒரே இரவில் மாற்ற முடியாது எனவும் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் இலங்கை மீது ஜனாதிபதி டிரம்ப் விதித்த 30 சதவீத வரி அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குறைக்கப்படும் எனவும் அது குறைக்கப்படாவிட்டால், அது ஆடைத் தொழிலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஐக்கிய ஆடை சங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
