நட்பு நாடுகளுடனான ட்ரம்பின் வரிப் போர்! இந்தியாவுக்கு விரையும் அமெரிக்க தலைமைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் வரிப் போரை அதிகரித்த பிறகு அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
நட்பு நாடுகள்
அதன் நட்பு நாடுகள் அவற்றை எதிர்த்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இந்த விஜயம் முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவுடனான தனது உறவை வலுப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது என மூத்த இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க விஜயத்திற்குப் பிறகு அமெரிக்க துணை ஜனாதிபதியின் வருகை சிறப்பு மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அங்கு அவர் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் பிற அமெரிக்கத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இந்த வருகைகள் பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் பொருளாதாரத் துறைகளில் இந்தியாவுடனான அமெரிக்காவுடனான ஆழமான ஈடுபாட்டைக் குறிக்கின்றன என்று ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
