ட்ரம்பின் வரியில் சிக்கிய இலங்கை.. காத்திருக்கும் பெரும் ஆபத்து!
அமெரிக்கா அறிவித்துள்ள தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர வரி விதிப்பில், அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கைக்கு 44 சதவீத பரஸ்பர வரியை அறிவித்துள்ளார்.
இன்றைய தினம், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், உலக நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புக்களை நேரலையில் வழங்கியிருந்தார்.
பரஸ்பர வரி பட்டியல்
இதன்போது, அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளை கொண்ட வரி விதிப்பு பட்டியல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.
அதில், பிற நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் வரி வீதமும், அமெரிக்கா அதற்கு விதிக்கவுள்ள தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர வரி வீதமும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு, இலங்கைக்கு 44 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.
அதேவேளை, பிரித்தானியாவுக்கு 10 வீதம், இந்தியாவுக்கு 26 வீதம் மற்றும் சீனாவுக்கு 34 வீதம் என அனைத்து நாடுகளுக்குமான வரி விதிப்புக்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வரி விதிப்பு, உலகில் வர்த்தக போரை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையிலும் இலங்கையில் தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ட்ரம்பின் அறிவிப்பு பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
WATCH LIVE: Trump announces broad tariffs at ‘Liberation Day’ White House event https://t.co/CRatGw4WN3
— PBS News (@NewsHour) April 2, 2025
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 6 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
