ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை – டிரம்ப்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு ஆர்வமம் கிடையாது எனவும், அந்த நாட்டின் இராணுவமும் தலைமையும் முற்றிலும் செயலிழக்கும் வரை போர் தொடரக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ‘நாங்கள் சரணடைகிறோம்’ என்று சொல்ல யாரும் இருக்காமல் போகலாம்” எனம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு, இராணுவம் அழிக்கப்பட்டால் பேச்சுவார்த்தை தேவையற்றதாகிவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஈரான் முழுவதும் புதிய தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.
அதேவேளை குவைட்டில் ட்ரோன் தாக்குதலால் அரசாங்க அலுவலகக் கட்டடம் ஒன்றில் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப், ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்ததுடன் அணு ஆயுதம் உருவாக்கும் நிலையில் இருந்ததாகக் கூறி தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. மேலும் போர் பின்னர் கட்டத்தில் அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகளை பாதுகாப்பாகக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சிறப்பு படைகளை ஈரான் அனுப்புவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் ஈரான் ஜனாதிபதி மசூட் பெஷஸ்கியான் அண்டை நாடுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
ஈரானின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் முன்வைத்த “நிபந்தனையற்ற சரணடைவு” கோரிக்கையை அவர் “ஒரு கனவு” என நிராகரித்தார். அதேவேளை, அந்த நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டால் அண்டை நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தாமல் இருக்க தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போரின் பின்னணியில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாவிட்டால் லெபனான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இந்த மோதலில் இதுவரை குறைந்தது 1,332 ஈரான் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஈரானின் தூதர் அமீர் சயிட் இரவானி தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த மோதலில் குறைந்தது ஆறு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் தீவிரமடைந்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam