ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை.. இஸ்ரேலுக்கு ட்ரம்ப் வழங்கியுள்ள உறுதிமொழி
ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபிதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப், "நாங்கள் ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம். அது சனிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அணுசக்தி திட்டம்
எங்களுக்கு மிகப் பெரிய சந்திப்பு உள்ளது, என்ன நடக்கக்கூடும் என்று பார்ப்போம். மேலும் ஒரு ஒப்பந்தம் செய்வது விரும்பத்தக்கது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுடனான மாற்று ஒப்பந்தத்தில் தான் ஈடுபட விரும்பாததால், ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை, ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ட்ரம்ப் வெளிப்படுத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த நடவடிக்கைக்கு தனது எச்சரிக்கையான ஆதரவைக் குறிப்பிட்டார்.
நெதன்யாகுவின் உறுதிப்பாடு
"ஈரான், அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்ற இலக்கில் நாங்கள் இருவரும் ஒன்றுபட்டுள்ளோம்," என்று ஓவல் அலுவலகத்தில் ட்ரம்புடன் அமர்ந்திருந்த நெதன்யாகு கூறியுள்ளார்.
Trump called himself the best president Israel could ever dream of. Netanyahu said they discussed the hostage situation and the war in Gaza, emphasizing that efforts are focused on getting all hostages out of Gaza. pic.twitter.com/lBFbRUdi9u
— Geopoliti𝕏 Monitor (@DalioTroy) April 7, 2025
அத்துடன், "லிபியாவில் செய்யப்பட்டதைப் போல, இராஜதந்திர ரீதியாக, முழுமையான முறையில் இதைச் செய்ய முடிந்தால், அது ஒரு நல்ல விடயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்." "ஆனால் என்ன நடந்தாலும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |