யுஎஸ்எய்டின் செயற்பாட்டை தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வரும் ட்ரம்ப் - மஸ்க்
தமது உயர் ஆலோசகர் எலோன் மஸ்க்கின்(Elon Musk) செயற்பாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ட்ரம்பின் அருகில் நின்ற கோடீஸ்வரர் மஸ்க், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
யுஎஸ்எய்ட்டின் நிதி
இதன்போது, தேர்தல் பிரசாரங்களின் போது சில நாடுகள் அரசியல் நோக்கங்களுக்காக யுஎஸ்எய்ட்டின்(Usaid) நிதி வளங்களைப் பயன்படுத்தியுள்ளதாக எலோன் மஸ்க் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில், யுஎஸ்எய்டின் செயல்திறன் குறித்து, குறிப்பாக அதன் நிதி தாக்கம் குறித்து மஸ்க் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மஸ்க் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருந்தபோது, அவரின் பக்கத்தில் நின்ற ஜனாதிபதி ட்ரம்ப், யுஎஸ்எய்ட், ஊழல் நிறைந்தது மற்றும் திறமையற்றது என்று தமது உணர்வை பகிர்ந்துக்கொண்டார்.
எலோன் மஸ்க்குக்கு கடிதம்
இதேவேளை, ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ரொபர்ட் ஃபிகோ, எலோன் மஸ்க்குக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஸ்லோவாக்கியாவில் உள்ள குறிப்பிட்ட செய்தியாளர்களுக்கு யுஎஸ்எய்ட் நிறுவனம் வழங்கிய மானியங்கள் குறித்து அவர் முறையிட்டுள்ளார்.
இந்த நிதி ஆதாரங்கள் ஸ்லோவாக்கியாவில் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![கோடிகளில் விலைபோன நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பட ஓடிடி மற்றும் Satellite ரைட்ஸ்.. மாஸ் வியாபாரம்](https://cdn.ibcstack.com/article/66bb02fe-ba8f-45ca-ba9e-04c2712309c6/25-67ac38e93693d-sm.webp)
கோடிகளில் விலைபோன நடிகர் அஜித்தின் விடாமுயற்சி பட ஓடிடி மற்றும் Satellite ரைட்ஸ்.. மாஸ் வியாபாரம் Cineulagam
![Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/5d3f63f4-4425-4687-9657-0766415ab801/25-67ac3325b20aa-sm.webp)