ட்ரம்ப் தற்காலிகமானவர்! ஐரோப்பாவிற்கு நம்பிக்கையூட்டும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர்
டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமானவர், இன்னும் மூன்று ஆண்டுகளில் அவர் பதவிக்காலம் முடிந்துவிடும்" என கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஐரோப்பிய நாடுகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் உரையாற்றினர்.
இதன்போது, அமெரிக்காவுடனான ஐரோப்பாவின் உறவு நிரந்தரமானது என்பதை வலியுறுத்தினார்.
அமெரிக்க-ஐரோப்பிய உறவு
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களாகக் கருதப்படும் பல ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று ஐரோப்பாவிற்குத் தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தினர்.

அதே சமயம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ட்ரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" கொள்கையினால் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டியவை என்று சமாதானப்படுத்தும் வகையில் பேசினார்.
இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் தேர்தல் முறைகளை தேசியமயமாக்குவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டைக் கட்டுப்பாடுகள் போன்ற ட்ரம்பின் அதிரடி நகர்வுகள் குறித்து ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் கவலை தெரிவித்தனர்.
ட்ரம்ப் நிர்வாகம்
2026ஆம் ஆண்டு இடைத்தேர்தல்களின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து செனட்டர் மார்க் வார்னர் கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்தமாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியிலும், அமெரிக்காவின் ஒரு பகுதி தலைவர்கள் இன்னும் ஐரோப்பாவின் நட்பு சக்தியாகவே இருக்கிறார்கள் என்ற செய்தியை இந்த மாநாடு உலகிற்குச் எடுத்து காட்டியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam