ட்ரம்பின் அதிரடி! USAID- இன் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்காவை சேர்ந்த USAID நிறுவனத்தின் 2,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தில்(USAID )சுமார் 2,000 ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், மீதமுள்ள முழுநேர ஊழியர்களில் பெரும்பாலோர் இரவு முழுவதும் நிர்வாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள் எனவும், அனுப்பட்ட தொழிலாளர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது.
நீதிமன்ற உத்தரவு
இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதன்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தது.
பின்னர் இந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் நீக்கியிருந்தது.
USAID அமைப்பு
இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும்(400 பேர்) விடுப்பில் அனுப்புவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |