ட்ரம்பால் கேள்விக்குறியாகியுள்ள பல தசாப்த கால நட்பு - பெரும் பொருளாதார நெருக்கடி..!
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான மோதல் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது.
கிரீன்லாந்தை, அமெரிக்கா, வாங்குவதற்கு டென்மார்க் சம்மதிக்கவில்லையென்றால், 2026 பெப்ரவரி மாதம் முதல் எட்டு நேட்டோ (NATO) நட்பு நாடுகளின் பொருட்கள் மீது 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திற்குள் தீர்வு
ஜூன் மாதத்திற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால், இந்த வரி 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நோர்வே பிரதமருடனான உரையாடலில் ட்ரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படாததால், இனி தான் "அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் தனது கடுமையான நிலைப்பாட்டை அவர் நியாயப்படுத்தியுள்ளார். இந்த நிலையில்,கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தைப் பயன்படுத்துவீர்களா?" என்ற கேள்விக்கு, ட்ரம்ப் "கருத்து ஏதுமில்லை" (No comment)* என்று பதிலளித்துள்ளார்.
பல தசாப்த கால நட்பு
இது சர்வதேச ரீதியாக பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது." அதேநேரம், நாங்கள் மிரட்டல்களுக்குப் பணிய மாட்டோம். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல" என்பதில் அந்த நாட்டின் பிரதமர் உறுதியாக உள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பு திட்டம் "முற்றிலும் தவறானது" என்று பிரித்தானிய பிரதமர் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பல தசாப்த கால நட்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.