இந்திய - பாகிஸ்தான் போர்நிறுத்தம்.. உரிமை கோரும் ட்ரம்ப்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தாமே நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பின்னர், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் உட்பட 6 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மறுக்கும் இந்தியா..
இந்தநிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்கு எளிதானது என்று தான் நினைத்ததாகவும், எனினும் அது கடினமானது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
செய்தி அறிக்கைகளின்படி, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களைத் தீர்க்க உதவியதாக, டொனால்ட் ட்ரம்ப் இதுவரை சுமார் 40 முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் உரிமை கோரி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரு நாட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர்களுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே, பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் குறித்த புரிதல் எட்டப்பட்டதாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



