கிரீன்லாந்து விவகாரத்தில் பின்வாங்கிய ட்ரம்ப்! மீண்டும் எச்சரித்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்
பிரசெல்ஸில் நேற்று நடைபெற்ற அவசர உச்சிமாநாட்டில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்கள், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக, கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக, ஐரோப்பிய நாடாளுமன்றம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒப்புதலை இடைநிறுத்தியிருந்தது.
மீண்டும் செயல்பாட்டில் வர்த்தக ஒப்பந்தம்
எனினும் தற்போது அந்த வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர விரும்புவதாக, ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அட்லாண்டிக் கடந்த ஒத்துழைப்பை (Transatlantic cooperation) வலுப்படுத்த விரும்புவதாகக் கூறும் அதே வேளையில், ட்ரம்ப் மீண்டும் தங்களை அச்சுறுத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே,கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா, அந்தத் தீவின் மீது கடும் வரிகளை விதிக்கப்போவதாகவும், ஒருவேளை இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அச்சுறுத்தியிருந்தது.
அவசரமாக கூட்டப்பட்ட உச்சிமாநாடு
இதன் காரணமாகவே இந்த அவசர உச்சிமாநாடு கூட்டப்பட்டது. இந்த நிலையில்,நாங்கள் உறுதியாக இருந்ததன் மூலம் வெற்றிகண்டோம்," என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஐரோப்பாவிற்கு அதன் கூட்டாளியான அமெரிக்கா மீதான நம்பிக்கையை வெகுவாகச் சிதைத்துள்ளதாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam