கனடா பின்னோக்கி செல்லாது - ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதித்தமைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
"இன்று, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளியான கனடாவிற்கு எதிராக வணிகப் போரை ஆரம்பித்துள்ளது," தெரிவித்துள்ளார்.
"அதே நேரத்தில், அவர்கள் ரஷ்யாவுடன் நேர்மறையாக செயல்பட விரும்புகிறார்கள், விளாடிமிர் புடினை சமாதானப்படுத்துகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் தற்காலிகமாக 30 நாட்கள் விடுவித்திருந்த வரிக் கட்டுப்பாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து கனடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, கனடா இரண்டு கட்டங்களில் அமெரிக்காவுக்கு எதிராக $30 பில்லியன் வரிக்கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்துகிறது.
மேலும் $125 பில்லியன் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 21 நாட்கள் கழித்து கூடுதல் வரிகள் விதிக்கப்பட உள்ளது. "கனடியர்கள் நாகரிகமானவர்கள், ஆனால் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டார்கள்," என்று ட்ரூடோ உறுதியளித்தார்.
கனடாவின் நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, 25% பதிலடி வரிகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், மது, கழிவறை காகிதம், ஆடைகள், பாதணி, அழகு சாதனப் பொருட்கள், பயணப்பைகளின் உட்பட பலவகை பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது.

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
