அனுமதியின்றி கழுதைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்திகள் தடுத்து வைப்பு
நுரைச்சோலை - நாரக்கல்லிய பகுதியில் நடந்த வீதி சோதனையின் போது, ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அவற்றின் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் கழுதைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதி இருக்கவில்லை. அத்துடன் போக்குவரத்தின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.
வனவிலங்கு விதிமுறைகள்
புத்தளம் ஒரு காலத்தில் கழுதைகளின் முதன்மை வாழ்விடமாக இருந்தது, எனினும், பின்னர் கல்பிட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு, கழுதைகளின் வாழ்விடங்கள் மாற்றம் பெற்றன.
இந்தநிலையில், கழுதைகளின் பாதுகாப்பிற்கான வனவிலங்கு விதிமுறைகள் இல்லாததால் கழுதைகள் அழிந்து போகக்கூடும் என்று புத்தளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னை தோட்டங்களை வண்டு தொல்லைகளிலிருந்து பாதுகாக்க கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், தென்னையை பாதுகாப்பது என்ற பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இந்த அனுமதிகளை தவறாகப் பயன்படுத்துவதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இறைச்சிக்காக கழுதைகளை வெட்டுவது நீண்ட காலமாக நடந்து வருவதாகவும், எனினும் அதிகாரிகளால், குறித்த செயற்பாடு கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri
