யாழில் உழவு இயந்திரத்துடன் லொறி மோதி விபத்து: ஒருவர் பலி
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(27.03.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 65 வயதுடைய சீனியர் இராஜன் என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில்
இருந்ததாகவும் இதனால் வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக
உழவியந்திரத்துடன் நிலை தடுமாறி மோதியதிலே விபத்து
இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், வீதியிலிருந்த மின்கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam