நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை : களமிறங்க தயாராகும் முப்படையினர்
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு முப்படையினரின் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சிடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஏற்பாடு செய்யும் போராட்டங்களை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். .
இதேவேளை, நேற்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்த மேலதிக பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri