நுவரெலியாவில் திருகோணமலை இளைஞன் கைது
நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23.01.2024) கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் எனவும், அவரின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கை
மேலும், அவர் சித்தப்பாவின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், இளைஞரிடம் விசாரித்துள்ளனர். அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை.
இதற்கமைய அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட, அவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று (24.01.2025) நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam