திருகோணமலையில் கொட்டும் கனமழை! பாதிப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான மழை காரணமாக அன்றாடப் போக்குவரத்து, பொதுமக்களின் இயல்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்புறப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
கனமழை
இதனால், நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதிலும் தாமதங்கள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, வீதி அபிவிருத்தி, வடிகால் அமைப்புகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மழையினால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமைகளைக் கண்காணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri