தமிழர் தலைநகரிலிருந்து கொழும்பிற்கான குறுக்கு வீதி! உயிர் பறிபோகும் அச்சத்தில் மக்கள் (Video)
அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கரடிக்குளத்திற்கு செல்லும் வீதி பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியானது தமிழர் தலைநகரான திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான குறுக்கு வீதியாக காணப்படுவதாகவும், இந்த வீதியை புனரமைப்பு செய்வதன் மூலம் சாதாரண பயணத்தை விட இவ்வீதியூடான பயணமானது பல மணித்தியாலங்களை மீதப்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் குறித்த வீதியானது குன்றும் குழியுமாக இருக்கும் நிலையில் அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவும் காணப்படுவதால் குறித்த வீதியில் மெதுவாக பயணிக்கும் போது யானைகளால் உயிரே போகும் அபாயமும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
“தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளே இப்போது உங்கள் கண்களுக்கு நாம் தெரியவில்லையா?” எனவும் வினவுகின்றனர்.
இதனை விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் அறிக்கை,

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
