திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் உதவ காத்துக்கொண்டிருக்கின்றது: கோபால் பாக்லே (Video)
எதிர்காலத்தில் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றது என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு இன்று (02) விஜயம் செய்து பூசை வழிபாட்டில் கலந்து கொண்டதுடன் ஆலய நிர்வாக பணிகளையும் இந்திய தூதுவர் பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து கோயில் நிர்வாகத்தினரையும் சந்தித்த கலந்துரையாடியதுடன் கோயில் நிர்வாகத்தினர் இந்திய தூதுவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளனர்.
அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்திய தூதுவர்,
இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது
“இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நான் வருகை தந்திருக்கிறேன்.
இன்றைய நாள் ஒரு விசேட நாள் நவராத்திரி காலம் விரதம் அனுஷ்டிக்கப்படுகிற அதே காலத்தில் காந்தி ஜெயந்தி நடைபெறுகின்ற இன்றைய நாளில் இந்த இடத்துக்கு நான் விஜயம் செய்து பூஜை வழிபாடுகளிலும் மிக நேர்த்தியாக நான் கலந்து கொண்டது மாத்திரமில்ல இந்த ஆலயத்தினுடைய தொன்மையான வரலாறு பூர்வீகமான விடயங்கள் அனைத்தையும் அறிஞர்களும், ஆலய நிர்வாகிகளும் எனக்கு நிறைந்த தெளிவுடன் எனக்கு அறிய தந்திருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் இந்த ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றது என்பதை மிகத் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆலயம் ஒரு புனிதமானது மாத்திரமில்ல நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு ஆலயம் என்பதை நான் அறிவேன்.
அந்த வகையில் இந்த ஆலயத்தினுடைய எதிர்காலம் நல்லதாக அமைய வேண்டும். இங்கு ஒரு ராஜகோபுரம் அமைக்கப்பட இருக்கின்றதையும் ஆலய நிர்வாகிகள் எனக்கு தெரிவித்தார்கள். அந்த விடயம் தொடர்பாகவும் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா சம்பந்தனின் அழைப்பின் பேரில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த இந்திய தூதுவர்.
திருக்கோணேஸ்வரத்துக்கு சென்று திருகோணேஸ்வரத்தை தரிசித்து பூஜை வழிபாடுகளில் பங்கு கொண்டதை தொடர்ந்து திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டார்.
இரா.சம்பந்தன் மிக ஒரு தலை சிறந்த அரசியல்வாதி
இதன்போது உரையாற்றிய இந்திய தூதுவர், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிக ஒரு தலை சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல ஒரு தலை சிறந்த சட்டத்தரணியும் ஆவார்.
அவருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு மிக நேர்த்தியானதும் தலை சிறந்ததுமாக காணப்படுகின்றது” என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகின்ற 200 குடும்பத்தைச்
சேர்ந்தவர்களுக்கு உலர் உணவு பொதிகளையும் இதன்போது வழங்கி வைத்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
