திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த தேர்த் திருவிழாவானது நேற்று (23.03.2024) அம்பிகையின் பக்தர்களின் பேராதரவுடன் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் இடம்பெற்றள்ளது.
தேர்த் திருவிழா
இதன்போது காலை 5.00 மணிக்கு மூலஸ்தான பூஜையும், தம்ப பூஜையும், 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெற்று, 8.00 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து, விநாயகரும், முருகனும் முன்னே வர அம்பாள் தனக்கென அமைக்கப்பட்ட சித்திரத்தேரினில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சியளித்துள்ளார்.

அத்துடன் தேருக்கு பின்னால் அம்பிகையின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை காணக்கூடியதாக இருந்தததுடன் மாணவ மாணவிகளின் இசை, நடன நிகழ்வுகளும் மற்றும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க போதியளவிலான தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாலை 6.00 மணிக்கு மகா ரிஷப வாகனத் திருவிழாவும் பச்சைமேனி அருட்காட்சியும் நடைபெற்று இன்றைய தேர்த்திருவிழா நிகழ்வானது நிறைவடைந்ததுள்ளது.

இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் கட்சிகள் ஒரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை சவாலுக்கு உட்படுத்த வேண்டும்: ஜி.ரி.லிங்கநாதன் அறைகூவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri