கனரக வாகனம் - வான் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு(Photos)
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் (06.06.2023) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற வான் ஒன்றும்,திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து மூடைகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இவ்விபத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனில் பயணித்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
கனரக வாகனத்தின் சாரதிக்கும், உதவியாளரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



