புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம்
புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 83 பேருக்கு கடந்த 9 மாத காலமாக சம்பளம் வழங்கப்படாததால் இன்று(07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அரசாங்கத்தின் போது நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களுடைய குடும்பங்கள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வருவதாகவும் பிள்ளைகளை கற்பிப்பதற்கு கூட வசதியின்றி இருப்பதாகவும் தமது கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.
தேர்தலின் போது புதிய அரசாங்கத்திற்கு தங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படும் என்ற நோக்கில் அயராது பாடுபட்டு வாக்குகளை அள்ளி வழங்கியிருந்த போதிலும் தற்போது தாங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாகவும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
எமது குடும்பங்கள் மற்றும் சிறார்களின் எதிர்கால நலன் கருதி எங்களுடைய சம்பளத்தை பெற்றுத் தருமாறு தாழ்மையாக கேட்டுக் கொள்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan