திருகோணமலை எண்ணெய் தொட்டிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை - விஜித்த ஹேரத்
இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) கூறியபடி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் திருகோணமலை எண்ணெய் தொட்டிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் (Vijitha Herath) இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த எண்ணெய் தொட்டிகள், எதிர்காலத்தில், தற்போதைய இலங்கை அரசாங்கத்தினால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுமா என்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் (ஐஓசி) கூட குறித்த எண்ணெய் தொட்டிகளுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று கூறும்போது, எண்ணெய் தொட்டிகள் முழுமையாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கூறுவது வருந்தத்தக்கது என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
ஐஓசியின் நிர்வாக இயக்குனர் ஷாம் போரா(Sham Borha), இலங்கையின் சட்டமா அதிபருக்கு 2017 இல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சட்டப்பூர்வ உரிமை இல்லாமல் எண்ணெய் தொட்டியை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், எண்ணெய் தொட்டிகளின் சட்டப்பூர்வ உரிமையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
