கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலா
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்தாலும் கன்னியா வெந்நீரூற்றானது தொல் பொருள் திணைக்களத்தின் கீழே பராமரிக்கப்பட்டு வருவதுடன் உள் நுழைவு டிக்கட்டிலும் தொல்லியல் திணைக்களம் என்றே அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் நபர் ஒருவருக்கு 100 ரூபாவும், வெளிநாட்டவர் ஒருவருக்கான டிக்கட் கொடுப்பனவாக 500 ரூபாவுமாக காணப்படுகிறது.
உள்ளூர் அதிகார சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சகல வருமானங்களும் உரிய சபைகளுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். ஆனாலும் கன்னியா வெந்நீரூற்று வருமானம் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமாகியுள்ளது.
இது இவ்வாறு இருக்க குறித்த பகுதியில் சிவன் ஆலயம் ஒன்றும் காணப்படுவதுடன் அதனை அண்டிய பகுதி கம்பிகளால் மறைக்கப்பட்டு உட் செல்ல தடை என கூறப்பட்டு தொல்லியல் பகுதி எனவும் அடையாளப் படுத்தியுள்ளனர்.
இவ்வாறாக உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரங்கள் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளதோ அது போன்று நடப்பத்தில்லை என சந்தேகிக்கப்படுகிறது. சுற்றுலா பகுதி தளமாக இது காணப்பட்டாலும் சில உரிமைகள் இங்கு மறுக்கப்படுகின்றன.
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam