தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்த முத்துநகர் விவசாயிகள்
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் நேற்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்வைக்கப்படும் கோரிக்கை
இதன்போது, "விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து நிறுவனங்களுக்க வழங்கப்பட்ட முத்துநகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு" போன்ற பதாகைகளை ஏந்தியவாறு சத்தியாக் கிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதேநேரம் இன்று (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகம் முன்பாகவே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
பொலிஸார் போராட்டகாரர்களின் இடத்தை அகற்ற முற்பட்ட போதும் கூட அகற்றப்படவில்லை. சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 34 நிமிடங்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam