திருகோணமலை மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (21.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு - செங்கலடி, கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீஸ்வரன் மதுசாந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துள்ளார்கள்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri