திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்.. அமைச்சரின் எச்சரிக்கை!
திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டது தொடர்பான சமீபத்திய சம்பவத்தைப் பயன்படுத்தி இனவாத அரசியலை முன்னெடுப்பதைத் தவிர்க்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தில் இன்று (18.11.2025) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த பிரச்சினைக்கு பதலளிக்கு வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
நீதிமன்ற தீர்ப்பு
நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலையை அகற்றவோ மேலும் கட்டுமான வேலைகளை செய்யவோ அல்லது வேறு எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என்று மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல இந்த வழக்கை 2025.11.26ஆம் திகதி மீள அழைப்பதாகவும் மஜிஸ்திரேட் அறிவித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் முழுமையான 'பி' அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
பூதாகரமாக்கும் அரசியல்வாதிகள்
விகாராதிபதி மற்றும் பொது மக்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறந்த முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது.

கரையோர திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி எல்லை தொடர்பிலுள்ள பிரச்சினைகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை காரணமாக கொண்டு கீழ்த்தரமான அரசியலை செய்ய முற்படுவோருக்கும் அத்தோடு இந்த சம்பவத்தை பூதாகரமாக்கி இனவாதத்தை தூண்ட எவ்விதத்திலும் அரசாங்கம் இடமளிக்காது” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |