திருகோணமலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் (Photos)
வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளணி மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22.09.2023) மதியமளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் நிலவிவரும் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யக் கோரியே குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கும் நடவடிக்கை
விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியாக இடம்பெறும் இப்போராட்டத்தை அகில இலங்கை சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
