டித்வா புயல் தாக்கம் : திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம் வெளியானது

Trincomalee Sri Lankan Peoples Weather
By H. A. Roshan Dec 02, 2025 08:48 AM GMT
Report

திருகோணமலை - மட்டக்களப்பு பாதை

திருகோணமலை - மட்டக்களப்பு பாதையின் இரால் குழி பகுதியில் முற்றிலுமாக சேதமடைந்த 500 - 800 மீட்டர் நீளத்தை புனரமைப்பதன் மூலம், திருகோணமலையிலிருந்து மூதூர், சேருவில மற்றும் வெருகல் வரையிலான விநியோகத்தை மீட்டெடுக்க முடியும் என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

குறித்த பகுதிக்கு இன்று (02)விஜயம் செய்து இது தொடர்பில் ஆராய்ந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, எப்படியும் மிகக் குறுகிய காலத்தில் இதைச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார். 

கந்தளாய் - சேருவில வீதி

மகாவலி ஆறு நிரம்பி வழிவதால், கந்தளாய் சூரியபுர தொடக்கம் சேருவில வரையிலான பிரதான வீதி கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது.

இதனால், அல்ல-சேருவில பொலிஸ் நிலையத்திற்கும் சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான முக்கியப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக, கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சூரியபுர, சமகிபுர மற்றும் சமனல பாலம் ஆகிய கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 139 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர். இவர்கள் அனைவரும் சூரியபுர மகாவலிபுர வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடம்பெயர்வு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீதி மூடப்பட்டிருப்பதால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி - யூஷப் 

புதிய இணைப்பு

சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22883 குடும்பங்களை சேர்ந்த 74449 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து இன்று (02) காலை 07.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17772 குடும்பங்களை சேர்ந்த 59071 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

75 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 6615 குடும்பங்களை சேர்ந்த 19260 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22594 குடும்பங்களை சேர்ந்த 73388 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 நேற்று (01) மாலை 06.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17612 குடும்பங்களை சேர்ந்த 58440 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.73 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 4836 குடும்பங்களை சேர்ந்த 14480 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் தடைப்பட்டிருந்த நீர்விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

கண்டியில் தடைப்பட்டிருந்த நீர்விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம்

திருகோணமலை  - பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 521 குடும்பங்களை சேர்ந்த 1849 நபர்களும், தம்பலகாமம் 450 குடும்பங்களை சேர்ந்த 1421 நபர்களும்,மொறவெவ 135 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும்,சேருவில 805 குடும்பங்களை சேர்ந்த 2287 நபர்களும், வெருகல் 1880 குடும்பங்களை சேர்ந்த 5607 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா 5007 குடும்பங்களை சேர்ந்த 16446 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயல் தாக்கம் : திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம் வெளியானது | Trincomalee District Disaster Details

மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுஇ

அத்துடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அபாயங்கள்

​மகாவலி கங்கை பெருக்கெடுப்பு மற்றும் மாவிலாறு உடைப்பு காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்தினால் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ விசேட கூட்டம் (01) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, ​ஆபத்தான பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ​தேவையான இடமாற்றத் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ​

மாவட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள்: வெளியான காரணம்

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள்: வெளியான காரணம்


GalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US