உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பாணியில் திருமலையில் நடந்த சதி.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எவ்வாறு திட்டமிட்டு செய்தார்களோ அவ்வாறு மாற்று கட்சிகள் திட்டமிட்டு, திருமலையில் புத்தர் சிலை விவகாரத்தை மேற்கொண்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபை உறுப்பினர் யோன்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "இன துவேசத்தை தூண்டுகின்றனர். அது தான் உண்மை இது மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அரச காணியை புத்த மகாசபைக்கு கொடுத்தனர்.
அன்று தொடக்கம் புத்தர் சிலை இருந்தது இன்று நேற்று அல்ல அப்போது திருகோணமலையின் நகரசபையை ஆட்சி செய்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் தமிழரசு கட்சி தான் ஆட்சி செய்கிறது. அன்று மகிந்த ராஜபக்ச அரச காணியை வழங்கிய புத்தர் சிலை வைக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
இனத் துவேசம்
இப்போதும் நகராட்சி சபையை ஆட்சி செய்வது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தா இல்லை? அதாவது திட்டமிட்டு எப்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்தார்களே இவ்வாறு திட்டமிட்டு நாங்கள் கொண்டு போய் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைப்போம்.

பின்னர் அதை எடுத்து கொண்டு வாங்க அதனை தமிழர்கள் கொண்டு சென்று விட்டார்கள் என ஒரு இனத் துவேசத்தை ஏற்படுத்த மாற்று கட்சிகள் போட்ட திட்டம் தான் இது என்பது அடிப்படையான உண்மை தேசிய மக்கள் சக்தி இதை உணர்ந்து ஒரு மாற்றத்தை எடுத்து அதை திரும்பவும் அங்கு வைத்தோம்.
எனவே இதை நன்றாக சிந்திக்கவும் இனவாதம் இல்லாத ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தி 76 வருடங்களாக பண்டாரநாயக்கா டட்லி சேனாநாயக்க இன துவேசத்தை பேசி வந்த இவர்கள் மாறி மாறி இந்த இன துவேசத்தை செய்தனர் இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நாங்கள் ஒற்றுமையாக பயணத்தை மேற்கொள்வோம்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |