கரடி தாக்குதலுக்கு இலக்காகி மூவர் படுகாயம்
திருகோணமலையில் கரடி தாக்குதலுக்கு உள்ளான மூவர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (01.07.2023) திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கோமரங்கடவல -பக்மீகம பகுதியைச் சேர்ந்த ஆர் பிரதீப் சம்பத் (29), பக்மீகம-அடம்பன பகுதியைச் சேர்ந்த சரத் திஸாநாயக்க (46) மற்றும் பக்மீகம- கூட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த கே.நிமலசிறி (38) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்றபோது கரடி ஒருவரை தாக்கிய சந்தர்ப்பத்தில் மற்றைய இருவரும் அக்கரடியை தாக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த கரடி மூன்று பேரையும் தாக்கி காயப்படுத்திய நிலையில் மூவரும் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து குறித்த மூவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
