திருகோணமலையில் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தாபெந்திவெவ பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ- அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சுத்தஹாமிகே தசநாயக்க (47வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்ரலால் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவருடைய வீட்டைச் சோதனையிட்ட போது அவருடைய வீட்டிலிருந்து இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், துப்பாக்கியைப் பாவிப்பதற்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரைத் திருகோணமலை நீதிமன்றில்
ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்
மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
